தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை கேட்டு மங்களாசாசனம் செய்துள்ள இப்பாடலில் குறிக்கப்பட்ட புட்குழி என்னும் இத்தலம் காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலு செட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு. வரலாறு. இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம் பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையானது என அறியுமாறில்லை. கற்றறிந்த பெரியோர்களையும் வைணவ ஆராய்ச்சியில் மிக்கோரையும் இந்த பேதங் குறித்து வினவுமிடத்து ஆமாம் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. என்கின்றனரேயன்றி எந்த தலத்திற்கு கூறப்பட்ட வரலாறு உண்மை என தெளிவுபடுத்துகிறார்களில்லை. இத்தல வரலாறு இவ்வாறு பேசப்படுகிறது. சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்து பின் ஜானகியைத் தேடி அவ்வழிழிழழிததததனதமனழிழிதமதமட்தமனதமழியில் வந்த இராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன் அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை இங்கு (இத்தலத்தில்) செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது) இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது. இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்பட்டுள்ளது. இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்படுகிறதே, இதில் எதை உண்மையானதாகக் கொள்ளலாமென பண்டித சிரோண்மணி தஞ்சை என்.எஸ்.தாத்தாச்சார்யாருக்கு கடிதம் எழுதியதில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். ..........தலபுராணங்கள் பெரும்பாலும் பிர்ம்மாண்ட புராணங்கூறும் தகவல்கள்தான். அவைகளில் பெரும்பாலும் நமக்கு குழப்பத்தையும், ஐயத்தையும், தரும் கருத்துக்கள் ஒன்றேபோல் பல தலங்களுக்கும் குறிப்பிட்டிருக்கும். அதை |