அந்தந்த தலத்துடன் புகழ்ந்து கூறி நிறுத்த வேண்டியதுதான். அதில் அதிக ஆராய்ச்சி கூடாது எவ்வாறாயினும் இரு ஸ்தலங்கட்கும் ஒரே வரலாறு பேசப்படும் போது எது உண்மை அல்லது எதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளதென ஆய்தல் கடமையாகும். இது ஆய்வுக்குரிய விஷயமுமாகும். திருப்புட்குழியைவிட, புள்ளம் பூதங்குடி திவ்யதேசத்திற்கே ஜடாயு தொடர்பான ஆதாரங்கள் அதிகம் இருப்பதாக ஒருவாறு தலைக்கட்டலாம். 1. சீதையைத் தேடிவந்த இராமன் புள்ளம் பூதங்குடியில் ஜடாயுவின் நிலையைக் கண்டு விபரந் தெரிந்து கொண்டபின் அந்திமச் சடங்குகளை நிறைவேற்ற சீதையில்லையே (பக்கத்தில் பிராட்டியில்லையே) என்று நினைத்தவுடன் பூமாதேவியே பிராட்டியாக வந்தார் என்பர். ஆனால் திருப்புட்குழியில் இரண்டு தேவிமார்கள் சூழ அமர்ந்துள்ளார். 1) சீதையைப் பிரிந்து நின்ற ராமனின் தோற்றமும் ஜடாயுவுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய பிராட்டியில்லையே என்று நினைத்தமாத்திரம் பூமாதேவி வந்துற்றதுமான இந்த நிகழ்வுகள் திருப்புட்குழியில் (ஸ்தல வரலாற்றில்) இல்லை. 2) ஸ்ரீ இராமன் இலங்கைக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதை சோழநாட்டுக்கு உட்பட்ட பகுதியாக இருக்கலாமென எண்ணலாமே தவிர காஞ்சியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையாக இருக்க இயலாது. 3. புள்ளம்பூதங்குடியில் ராமன் வல்வில் இராமன் என்று திருநாமம் பூண்டுள்ளார். இந்த வில்கொண்ட ராமன்தான் ராமாயணம் காட்டும் ராமனாவான் ஆனால் திருப்புட்குழி யெம்பெருமானுக்கோ விஜயராகவப்பெருமாள் என்பது திருநாமம். ராகவம் என்னும் சொல் இராமனையே குறித்தாலும், குறிப்பாக வல்வில்ராமன் என்று அடையாளமிட்டு குறிக்கும் அழகே தனி. இந்தத் தத்துவம் புட்குழி யெம்பெருமானுக்கு இல்லை. 4. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் புள்ளம் பூதங்குடி பெருமாளை வல்வில் இராமன் எனக் குறிக்கிறார். ஆனால் புட்குழியெம்பெருமானின் விஜயராகவத் திருநாமத்தை மங்களாசாசிக்கவில்லை. புட்குழி என்று மட்டுமே மங்களாசாசனம் செய்கிறார். மேலும் புள்ளம் பூதங்குடிக்கு |