பக்கம் எண் :

348

     இவர் அருளிய 10 பாசுரங்களில் இராமாயணக் காதையை நினைவு
கூர்கிறார்.

     ‘வெற்பால் மாரி பழுதாக்கி
          விறல் வாளரக்கன் தலைவன்றன்
     வற்பார் திரன் தோளைந் நான்கும்
          துணித்த வல்வில் இராமனிடம்’

     என்ற இந்த வல்வில் இராமனுக்கும் இராமாயணத்திற்கும் உள்ள
தொடர்பை தெளிவுபடுத்துகிறார்.

     5) இராமாயணத்திலும் ஜடாயுவுடன் தொடர்புள்ளதாக இத்தலம்
பேசப்பட்டுள்ளது.

     பூதபுரி ஷேத்ரே வந்தே புன்னைவன ஸம்ஸ்திதம்
     ஸௌமித்ரேகா காஷ்டாநி நிர்மதிஷ்யாமி பாவகம்
     க்ருதமாறும் தித்சஷாமி மத்க்ருதே நிதநம்கதம்
                    (ஸ்ரீராம. ஆரண் 68-27)

     இச்சுலோகத்தில் பூதபுரி சேஷத்ரம் என்று குறிக்கப்படுகிறது புள்ளம்
பூதங்குடியே அன்றி திருப்புட்குழியன்று என்பது வெள்ளிடைமலை. மேலும்,

     விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ.... ஸஸ்மாசர்தம்
     க்ருதராஜம் புஷ்கரிணி தீரே லஷ்மனோ லஷ்மி ஸம்பன்ன
                                       ஆரண் 68 33

     என்னும் வரிகளும் இத்தலத்தின் விமானம் தீர்த்தம் போன்றவற்றைக்
குறிக்கப்படுவதுடன் இலக்குமணனுடன் இராமன் மட்டும் வந்துற்றதையும்
தெளிவு படுத்துகிறது.

     எனவே ஜடாயுவுக்கு மோட்சமளித்த ஸ்தலம் புள்ளம் பூதங்குடியே
என்று கொள்ளலாம். அவ்வாறாயின் திருப்புட்குழியின் ஸ்தலவரலாறு யாதென
ஆராயவேண்டும். அதை அறிஞர் மாட்டே விடுகின்றேன்.

மூலவர்

     விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த
திருக்கோலம்.

தாயார்

     மரகதவல்லி (தனிக்கோவில்)