பக்கம் எண் :

349

தீர்த்தம்

     ஜடாயு தீர்த்தம்

விமானம்

     விஜயகோடி விமானம்

காட்சி கண்டவர்கள்

     ஜடாயு

சிறப்புக்கள்

     1. ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை
உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்
புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது
ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில்
அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாகமாறி
எழுந்தருளியுள்ளார்.

     வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது
இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.

     2. இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும்
போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.

     3. இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில்
ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான் போரேறு என்று தமிழ்படுத்தினார்
ஆழ்வார்.

     4. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில்
(பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன்
அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும்.
இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான்
இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று
பெயர் பிரசித்தம்.

     5. இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர்
அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும்
உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும்