இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.] 6. நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும். 7. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. மன்னு மரகதத்தை புட்குழியெம் போரேற்றை என்பார் திருமங்கையாழ்வார். 8. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார். 9. இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் பன்முறை எழுந்தருளியுள்ளனர். 10. நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கூறுகிறார். பிரகலாதனைக் கொல்வதற்காக இரண்யன் பெரிய மத யானைகளை (மால்வேழம்) அனுப்பினான். பாம்புகளை ஏவினான். எண்ணற்ற மாயைகளைச் செய்ய வைத்து அச்சுறுத்தினான். மலை மீதிருந்து உருட்டச் செய்தான். கை கால்களைக் கட்டி கடலில் எறியச் செய்தான். படைக்கலன்களால் தாக்கச் செய்தான் பெற்ற அன்னையின் கரத்தாலேயே விஷத்தையும் கொடுக்கச் செய்தான். இவையெல்லாம் பயனன்றிப் போய் விட்டது. இறுதியில் தீக்குழி அமைத்து எறிகின்ற தணலில் இறக்கினான். ஆனால் அப்போதும் அந்நெருப்பு அவனுக்கு இதமான குளிர் போன்றிருந்தது. இத்தனைக்கும் என்ன காரணம் என்ன பலம் பெற்றிருந்தான் |