பக்கம் எண் :

351

பிரகலாதன். அவன் பெற்றிருந்த பலம் நாராயணா என்னும் மந்திரம் மட்டுமே.
இதையெல்லாம் கேட்டும் நாராயணன் நாம மகிமையை அறியாமல் உள்ளனரே
இந்த மானிடர்கள். அன்று நெருப்புக்குழியை குளிர்ந்த தடாகம் போன்று
ஆக்கிய நாராயணன் அன்றோ திருப்புட்குழியில் உள்ளான். இவனின்
சீர்மைகள் எளிதில் சொல்லத் தக்கவோ?

     திருப்புட்குழியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வடமொழியில்
போரேறு என்றான் (போர்க்களத்தே பாயும் சிங்கம் என்றனரோ) அந்தப்
போரேறு போன்ற விஜயராகவன் திருமலரடியை நாடுங்கள் என்று
இத்தலத்திற்குப் பெருமை சூட்டுகிறார்.
 

     “மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும்
     மேல் வீழப் படையும் விட்டுப் போய்ப் - பாலன்
     நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோர்
     திருப்புட்குழி யமலன் சீர்”
                  - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்