பக்கம் எண் :

353

     அப்போது எம்பெருமான் பாசுரங் கேட்டுவந்து நிற்பதைக் கண்ட
திருமங்கையாழ்வார்.

     நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
          நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
     காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
          கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே

     என்று எம்பெருமான் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது
கடன் மல்லையில் என்று மங்களாசாசித்தார்.

     நம்மாழ்வாரிடம் திவ்யதேச எம்பெருமான்கள் எல்லாம் புளிய மரத்தின்
இலைகளின்மேல் அமர்ந்து நான் முந்தி நீ முந்தி எனக்கு ஒருபாட்டு எனக்கு
ஒரு பாட்டு என்று பாடல் கேட்டாற்போல் திருநின்றவூர் எம்பெருமான் கடன்
மல்லையில் வந்து காத்திருந்து பாடல் பெற்றுப் போனார்.

     எனவே இத்தலம் நம்மாழ்வாரின் பாடல்கள் பெற்ற தலத்திற்குள்ள
விசேஷத்துவத்தைப் பெறுகிறது.

     பாடல் பெற்றுவந்த எம்பெருமானை நோக்கிய பிராட்டி என்ன இது,
எல்லா ஸ்தங்கட்கும் பத்தும் அதற்கு மேலாகவும் பாக்களிருக்க நமக்கு ஒன்று
மட்டுந்தானா என்று கேட்க எம்பெருமான் அதுவும் சரிதான் என்று மீண்டும்
பாடல்பெற திருமல்லை தேடிவர அவர் அதற்குள் திருக்கண்ண மங்கை
வந்துவிட்டார். பெருமாளும் பின் தொடர்ந்தார். கண்ணமங்கைப் பெருமாளை
மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை
ஓரக் கண்ணால் கண்ட திருமங்கையாழ்வார் நின்றவூர் நின்ற நித்திலத்
தொத்தினை என்று பெருமாளையும் அவர் காற்றினும் கடுகி வந்த வேகத்தைக்
குறிக்கு மாற்றான் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும்
குறித்து கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று அவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்தார்.

     திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தைவிட்டு இங்குவந்து
நின்றதால் திரு நின்றவூராயிற்று. திருமகள் ஏதோஒரு காரணத்தால் (காரணம்
இன்னதென அறியுமாறில்லை) ஆதிசேடனைத் தாங்கியுள்ள ஸமுத்திர
ராஜனுடன் கோபம் செய்து கொண்டு இவ்விடத்து வந்து நின்றதாகவும், பிறகு
ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகுண்டம்
எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும்
திருமகள் மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் வந்து
எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும்
தேவியை மீண்டும் இங்கே