பக்கம் எண் :

354

எழுந்தருள மனங்கனிய அருள வேண்டும் என வேண்டினான். பக்தர்க்கு
இரங்கும் பண்பினான பரந்தாமன் மீண்டும் ஸமுத்திர ராஜனைப் பிராட்டியிடம்
அனுப்பி நீ முன்னால் செல், நான் பின்னால் வருகிறேன் என்று
சொல்லியனுப்ப அவ்வண்ணமே ஸமுத்திரராஜன் வந்து தன்னை மீண்டும்
மன்னிக்குமாறு என்னை பெற்றதாயே என்றும் பலவாறு வேண்டியும் திருமகள்
சமாதானம் அடையவில்லை. அவ்வேளையில் எம்பெருமானும் அங்கு
எழுந்தருளி சமாதானஞ் சொல்ல திருமகள் மீண்டும் வைகுந்தம் எழுந்தருள
சம்மதித்தார்.

     இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சி கொடுத்த
எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் காட்சி
கொடுத்ததால், ஸமுத்திர ராஜனைக் நோக்கி உனக்கு என்னவேண்டும் என்று
கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து
அதேபோல் இங்கேயே நின்றிலங்கவேண்டும்மென்று வேண்ட அவ்வண்ணமே
அருள் பாலித்தனர்.

     பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம் (பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப்
பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால்
பெருமாளுக்கு இங்கு பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இவ்வாறு பக்தர்களின்
உயிருக்குயிராய் விளங்குவதால் பத்தராவிப்பெருமாள் என்ற திருநாமமுண்டு
ஸமுத்திரராஜன் பிராட்டியை வேண்டும்பொழுது என்னைப் பெற்ற தாயல்லவா
என்று சொல்லி தன்பிழை பொறுத்து வைகுண்டம் ‘மீளக் கேட்டுக்
கொண்டதால் என்னைப் பெற்ற தாயார் என்பதே பிராட்டியின் திருநாமம்
நன்னு கன்ன தல்லி’ என்பர் தெலுங்கில்.

மூலவர்

     பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்றிருந்த
திருக்கோலம்.

தாயார்

     என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி

தீர்த்தம்

     வருண புஷ்கரணி

விமானம்

     உத்பல விமானம்

காட்சி கண்டவர்கள்

     ஸமுத்திர ராஜன், வருணன்.