பக்கம் எண் :

355

சிறப்புக்கள்

     1. ஸமுத்திர ராஜன் இவ்விடம் வந்ததால் தான் முகந்து செல்ல நீரில்லாத
காரணத்தால் என்னவோ ஏதோவென்று வருணனும் இங்கேவந்து விட்டான்.
எனவே இங்கு வருணனுக்கு பிரத்யட்சம்.

     2. திருமகள் இங்குவந்து தனித்துநின்ற இடம் இப்போது இக்கோவிலின்
மேற்கில் ஒரு நாலுகால் மண்டபமாக உள்ளது. இவ்விடத்தும் ஒரு புஷ்கரணி
உள்ளது.

     3. திருமலை பெரிய திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகளின்
நிர்வாகத்திற்குட்பட்டது இந்த ஸ்தலம்.

     4. திருமங்கையாழ்வாரால் மட்டும் இரண்டு பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

     5. திருமங்கையாழ்வார் திருவள்ளூரைச் சேவித்துவிட்டு,
திருநின்றவூருக்கு வரும்போது பெருமாள் பிராட்டியோடு ஏகாந்தத்தில் இருக்க
திருமங்கையாழ்வார் நேராகத் திருவல்லிக்கேணி சென்றுவிட்டார். இதனை
அறிந்த பிராட்டி, அய்யகோ திருமங்கையிடம் பாசுரம் பெறாது
போய்விட்டோமே என்று பெருமாளை அனுப்ப எம்பெருமான் வந்த
விஷயத்தை அறிந்த ஆழ்வார் உடனே
 

     ஏற்றினை இரயத்துள் எம்மீசனை.................................
     ............கண்ணமங்கையில் கண்டு கொண்டேன்

     என்று மீண்டும் மங்களாசாசனம் செய்தார் (இப்பாடல் தலைப்பில்
கொடுக்கப்பட்டுள்ளது)

     இவ்வாறு பிராட்டி பாடல் பெற்றுவரச் சொன்னதாக
அண்ணங்காராச்சார்யர் விளக்குவர்.

     6. திருநின்றவூர் என்னும் இந்த திண்ணனூர், கிராமத்துப் பாணியில்
அமைந்திருந்தாலும் விரைந்து நகரமாகும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
அதேசமயம் இத்தலம் அமைந்துள்ள இடம் மிகவும் அமைதியைத்
தருவதாகும்.

     7. உண்மையான பக்தியுடன் இந்தப் பெருமாளை வேண்டிக்
கொண்டவர்கட்கு அவர்களது பிரார்த்தனை ஈடேறுகிறது என்பது இங்கு
கண்கூடான நம்பிக்கை இங்குள்ள பெருமானையும் பிராட்டியையும் சேவித்து
சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் (தூய்மையான