மனதுடன்) எண்ணிய நல்லெண்ணங்கள் யாவும் நிச்சயம் கைகூடும். இதற்கோர் உதாரணம் கண்கூடு. பூந்தமல்லியில் (பூவிருந்த வல்லியில்) நாசரத்பேட்டையில் அனந்த நாராயண தீட்சிதர் பூமிநாச்சியார் என்னும் தம்பதியார் வாழ்ந்து வந்தனர். (இந்த பூமிநாச்சியார் இராமானுஜரின் பெரிய சகோதரி) இவர்கட்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரப்பேறு வேண்டி திருமலையாத்திரையை மேற்கொண்டனர். யாத்திரையின்போது இத்தலத்திற்கு அருகில் உள்ள வருண புஷ்கரணியின் சமீபம் உள்ள ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர். மானசீகமாக இப்பெருமானை வேண்டினர். (மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரிகாத்த ராமன் உள்ளன்) அப்போது அவர்களின் கனவில் தோன்றிய ராமன் நீங்கள் புத்திரப்பேறு குறித்து திருமலை செல்லவேண்டாம். எம் அம்சமாக உங்கட்கு ஒரு புத்திரன் பிறப்பான் என்றார். அவர்களும் அவ்வண்ணமே ஊருக்குத் திரும்ப அவர்கட்கு வைணவ சீலனாக ஒரு திருமகன் அவதரித்தான். அவர்தான் முதலியாண்டான். இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே லட்சுமணன் அவதாரம் செய்தான். (ஆம் ராமானுஜராக வந்தது ஆதிசேடனன்றோ) தற்போது ராமபிரானின் அம்சமாக முதலியாண்டார் அவதரித்தார். இவ்வாறு லட்சுமணன் முதலாவதாகவும் ராமன் இரண்டாவதாகவும் அவதாரம் செய்தது பகவத் அவதாரங்களிலேயே இதற்குமுன் ஒருமுறைதான் நிகழ்ந்தது. அதுதான் ஸ்ரீகிருஷ்ணர் - பலராமர் அவதாரமாகும். இவர் (முதலியாண்டார்) பிற்காலத்தே இராமானுஜரின் பிரதம சீடராகத் திகழ்ந்தார். இராமானுஜருக்கு சாத்துமறை நடந்த மறுநாளில் இவருக்கு சாத்துமறை நடக்கும். இவரது உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று திவ்யங்கள் எனப்படும். அவை. அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல் ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம். |