பக்கம் எண் :

36

     மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,
கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்
பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்
5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.

     5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய
மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்
கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்
ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளை
இப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.
 

ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற வசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ
                          - பெரியாழ்வார் திருமொழி 3-8-4

     என்று மயங்கி மகிழ்வார்.

     6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108 திவ்யதேசங்களில்
இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை. 12 ஆழ்வார்களில்
மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரை
மட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்
பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்த
எம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.

     7) திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டினார். திருநறையூர்
எம்பெருமான் மீது திருமடல் பாடியருளினார். தமக்கு மதில் எழுப்பியதால்
சந்தோசமடைந்த அரங்கநாதன் திருமங்கையாழ்வாரை விளித்து தீர்த்தம்,
மாலை,