பக்கம் எண் :

366

     பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற
முனிவரைக் கண்டு (சுமதி மன்னர்வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற
இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர்.
வலப்புறம் ருக்குமணியையும் இடப்புறம் சாத்தியாகியையும் நிறுவி வழிபட்டு
அவ்விருவரும் மோட்ச உலகுபெற்றனர்.

     இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட
சுமதி மன்னனும் அவ்விதமே வழி பாடியியற்றினான். வேங்கடவனால்
காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்

     வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி,
அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர்

     பார்த்தசாரதி

தாயார்

     வேதவல்லி

விமானம்

     ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம்,
தைவீக விமானம்.

தீர்த்தம்

     கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி,
மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம். கடலுக்கு மிக
அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு
புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே
தீர்த்தம்.

காட்சி கண்டவர்கள்

     சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர் அத்திரி
மகரிஷி, ஜாஜலி மகரிஷி

சிறப்புக்கள்

     1) ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ள ஸ்தலம்

     அ) அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர்
விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தது எழுந்தருளினார்.