5. திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் 20 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 6. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது. 7. வாணாசுரன் என்னும் அரக்கனை கண்ணபிரான் கொன்றான் அவன் சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள். தன் மகள் பொருட்டு அநிருந்தனைச் சிறை வைத்தான் அவன். அநிருந்தனை கண்ணன் மீட்டுப் போக வந்தான். தன் உடல்வலியே பெரிதென்று எண்ணி கண்ணபிரானோடு பொருதான். கடும் யுத்தம் செய்தான். அவனுக்கு உதவவந்த அரக்கர்கள் அனைவரையும் கண்ணன் வீழ்த்தினான். வாணன் மட்டும் தவறாது கடும்போர் புரிந்தான். இறுதியில் கண்ணன் தன் சக்ராயுதத்தால் அவனது கரங்களை அறுத்து வீழ்த்தினான். இந்நிலையில் தன் பக்தனுக்கு இரங்கிய சிவன் அவனுக்கு உயிர் பிச்சை அளிக்க கண்ணனை வேண்டினான். அதனால் கண்ணன் அவனது 4 கரங்களை வெட்டாது விட்டான். மிகவும் வெட்கிப்போன வாணாசுரன் தனது நான்கு கரங்களால் கண்ணனைத் தொழுது அவனது நீர்மைத் தன்மையே பெரிது என்று கூறி, நீர்மலையெம்பெருமானைச் சுட்டிகாட்டி தொழுது நின்றான். நான்கு வேதங்களும் எம்பெருமானைத் தொழுவது போல நான்கு சுரங்களால் திருநீர்மலையினைத் தொழுது நின்றான். நீரினை அரணாகக்கொண்ட நீர்மலையானே தனக்கும் அரண் சர்வ உலகத்தையும் அவனே ரச்சிப்பவன் என்று தொழுதான். இதனைப் பிள்ளைப் பெருமாளையங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், இரங்கு முயிரனைத்து மின்னருளால் காப்பான் அரங்க னொருவனுமேயாதல் - கரங்களால் போர்மலை வான் வந்த புகழ்வாணன் காட்டினான் நீந்மலை வா ழெந்தையெதிர் நின்று | என்று கூறி இத்தலத்தின் மாண்பிற்கு மேலும் மெருகூட்டுகிறார். |