பக்கம் எண் :

377

தேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து
தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு
ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம்
செய்து கொண்டார்.

     கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360
கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார்.
திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன
படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி
திருவடந்தை ஆயிற்று.

மூலவர்

     லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர்

     நித்ய கல்யாணப் பெருமாள்

தாயார்

     கோமளவல்லி நாச்சியார்

தீர்த்தம்

     வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்

விமானம்

     கல்யாண விமானம்

காட்சி கண்டவர்கள்

     பலி, காலவ ரிஷி

சிறப்புக்கள்

     1. இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன்
என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான்.
இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச்
செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக
மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில்
வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.      

     இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும்
பாதையின் ஓர்பால்