அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். 2. 360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. 3. தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு. 4. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர். இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம் 5. நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும். 6. இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்றிலங்குகிறார். 7. கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில் இக்கிராமம் இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்... நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும் திருவிழா உள்ளிட்டு வேண்டும் நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக ... கொடுக்க வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது. |