பக்கம் எண் :

428

பாசுரங்கள் பாடியுள்ளதை திருமங்கை தமது சிறிய திருமடலில் இத்தலத்தைக்
குறிக்கிறார்.

     இங்கு ஒரு பெரும் நகரமிருந்து ஏதோ காரணத்தால் அழிந்து
பட்டதற்கான அடையாளங்கள் (இத்தலம் மற்றும் இவ்வூரைச் சுற்றியுமுள்ள
இடங்களால்) இன்றும் உணர முடிகிறது. இந்நகரின் செழுமையினையும்
மாண்பினையும்
 

     திடவிசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தன் திருப்புலியூர்
     குன்றமாமணி மாட மாளிகை....
     தென்திசை திலதம்புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்
     சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப்புலியூர்
     புல்லிலைத் தெங்கிணோடு சாலுலவும் தண் திருப்புலியூர்
     புன்னையம் பொழில்சூழ் திருப்புலியூர்

     என்றெல்லாம் நம்மாழ்வார் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்.