பக்கம் எண் :

427

     3. ஒரு காலத்தில் தமிழ்நாடு பன்னிரண்டு உட்பிரிவுகளைக் கொண்டதாக
திகழ்ந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் பன்னிரண்டு உட்பிரிவுகள்

     1. தென்பாண்டி        2. குடநாடு
     3. குட்ட நாடு         4. கற்கா நாடு
     5. வேணாடு           6. பூமி நாடு
     7. பன்றி நாடு          8. அருவா நாடு
     9. அருவா வடதலைநாடு 10. சீத நாடு
     11. மலை நாடு          12. புனல் நாடு

     என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதில் குட்ட நாடும் ஒன்று இதனை
கீழ்வரும் பழம்பாடல் விளக்குகிறது.
 

     தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி
          பன்றியருவர் வதன் வடக்கு நன்றாய
     சீத மலாடு புனாடு செந்தமிழ் சேர்
          ஏதமில் பன்னிரு நாட்டென்----

     என்ற பாடலில் குட்டம் என்று இந்தக் குட்ட நாடு் குறிக்கப் பெறுகிறது.
அந்தக் குட்ட நாட்டில் சிறந்த பெருநகரமாக விளங்கிய இப்புலியூர்
‘குட்டநாட்டுத் திருப்புலியூர்’ என்றே அழைக்கப்பட்டது.

     தலைப்பிலிட்ட பாடலில் சுவாமி நம்மாழ்வாரும் தென்திசைக்கு திலகமாக
இக்குட்டநாடு விளங்கியதை ‘தென்திசை திலதம் புரை குட்ட நாட்டுத்
திருப்புலியூர்’ தென்திசை திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்’ என்றே
திருவாய் மலர்ந்ததுமட்டுமன்றி அங்கு எழுந்தருளிய எம்பெருமானின் பெயரை
மாயப்பிரான் என்றும் மொழிந்துள்ளார்.

     எனவே தற்போது குடந்தை ஆராவமுதன், கச்சி வரதராஜன் என்று
குறிக்கப்படுதலைப் போன்று குட்ட நாட்டுத் திருப்புலியூர் மாயப்பிரான் என்றே
இப்பெருமான் அழைக்கப்பட்டார்.

     (செப்பேடுகளிலும், மலையாளத்து நூல்களிலும் மேற்குறித்தவாறே
செப்பிச் செல்கிறது)

     4. இத்தலம் நம்மாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் 11