பக்கம் எண் :

430

தன்போன்றோர் செய்யத் தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான்
அர்ஜு னன்.

     ஏற்கனவே பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தைப் புதுப்பித்தனர். அதாவது
ஒவ்வொருவரும் ஒரு திவ்ய தேசத்தை தெரிவு செய்து தமது எண்ணத்தை
ஈடேற்ற தவமியற்றினர்.

     அர்ஜு னன் இந்த இடத்தில் இருந்த பெருமாளைத் தியானித்து
தவமிருந்ததாகவும், இத்தலத்திற்கு அருகாமையில் இருந்த வன்னி மரத்தில்
தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அந்த வன்னிமரம்
இத்தலத்தருகே இருந்தது என்பதும் ஐதீஹம்.

     போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு முரணாக கொன்றதால் தனது
நெஞ்சம் அமைதியுறவும், யுத்தத்தில் உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும்
மீண்டும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்ததாகவும் எம்பெருமான்
பார்த்தசாரதியாகவே காட்சியளித்ததாகவும் ஐதீஹம்.

     அர்ஜு னன் இரண்டாம் முறையாக வந்த போதே இத்தலத்தை
புதுப்பித்ததாகவும் ஐதீஹம்.

மூலவர்

     திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     பத்தமாஸனித்தாயார்

தீர்த்தம்

     வேதவியாச தீர்த்தம். பம்பா தீர்த்தம்.

விமானம்

     வாமன விமானம்

காட்சி கண்டவர்கள்

     பிரம்மன், வேதவியாசர், அர்ஜு னன்.

சிறப்புக்கள்

     1. திருவாறன் விளை என்ற பெயர் வந்ததற்கான காரணம்
அறியுமாறில்லை. ஆயின் எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்பது
வாமனவதாரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. பிரம்மன், வாமன
அவதார மூர்த்தியை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது
போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு.