இவ்வூருக்கு மேற்கே மகேந்திரகிரி என்ற மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பாணன் இத்திருக்குறுங்குடி எம்பெருமான் மீது பெரும் பக்தி கொண்டவனாய் கைசிகம் என்ற பண்ணை இசைத்துக்கொண்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு எம்பெருமானை பாடிப் பரவசித்து வந்து தொழுது செல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தான். அவ்விதம் ஒரு நாள் வரும் போது அவ்வழியிடைப்பட்ட காட்டில் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுபவனைப் பிடித்துக்கொண்டு தனக்கு உணவாக வேண்டுமென்று கேட்டான். அதற்கு நம்பாடுவான் நான் தற்போது விரதம் பூண்டுள்ளேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு மீண்டு வரும்போது உனக்கு உணவாகிறேன் என்று சொல்ல ராட்சசன் இதை நம்ப முடியாதென்று சொல்ல, நான் திருமாலின் தூய பக்தன் பொய் சொல்லேன் (தீக்குறளைச் சென்றோதோம்) என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க அவனும் சம்மதித்து அனுப்பினான். நம்பாடுவான் இதுவே நமக்கு கடைசி யாத்திரையாயிருக்குமோ என்று எண்ணி தான் கீழ்ச்சாதி என்பதால் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததை எண்ணி வழக்கம் போல் கோவிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்திற்கு எதிரே நின்று பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கும் பட்சத்தில் இதுவே தமக்கு கடையாத்திரையாக இருந்தால் இக்கோவிலின் உள்ளே எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பார்க்க இயலாதே என்று மனத்தில் எண்ணிய மாத்திரத்தில் துவஜஸ்தம்பம் சற்றே விலக உள்ளேயிருந்த பெருமாளைக் கண்டு களி கூர்ந்து மிகவும் சந்தோஷித்து தன் விரதம் முடித்து திரும்பினான். நம்பாடுவானுக்காக துவஜஸ்தம்பம் விலகியதால்தான் மற்ற ஸ்தலங்களில் இருப்பதைப் போலன்றி இத்தலத்தில் துவஜஸ்தம்பம் சற்றே விலகிய நிலையில் உள்ளது. நம்பாடுவான் திரும்பிவரும் பொழுது இடைப்பட்ட காட்டுப்பகுதியில் குறுங்குடியில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரில் வந்துஇவ்வழியே செல்லவேண்டாம். இக்காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் இருக்கிறான். அவன் பிடித்து தின்று விடுவான் என்று சொல்ல, சிரித்துக்கொண்டே நம்பாடுவான் அவனுக்கு உணவாவதற்காகவே நான் செல்கிறேன். இது நான் அவனுக்கு கொடுத்த வாக்குறுதி என்றான். இதைக்கேட்ட பிராம்மணன் ஆபத்து நேரிடும் காலங்களிலும், பெண்களுக்கு விவாகம் செய்ய |