| வேண்டிய சந்தர்ப்பத்திலும் பெண்களிடம் ஏகாந்தத்தில் இருக்கும் போதும் பொய் சொன்னாலும் சத்தியம் செய்து கொடுத்தாலும் அது பாவமாகாது என்று சொல்ல அதற்கவன் சுவாமி உயிர்போனாலும் நான் செய்து கொடுத்த சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை என்று சொன்னதும் எம்பெருமான் நம்பாடுவானுக்கு தன் சுயரூபத்தைக் காட்டி மறைந்தார். பிறகு பிரம்ம ராட்சசனைச் சந்தித்த நம்பாடுவான் என்னைப் புசி என்று சொல்ல அவன் எனக்குப் பசியே இல்லையே இனிமேல் எப்போதும் பசியே எடுக்காதுபோல் தோன்றுகிறது. உன்னை நான் உணவாகக் கேட்டதற்கு என்னை மன்னித்துவிடு என்று கூறி, நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்கு கொடு என்று கேட்க நம்பாடுவான் முடியாதென்று மறுக்க எனக்கு இந்த பிரம்ம ராட்சச உருவம் நீங்க வேண்டுமென்றால் நீ பெற்ற பலத்தில் கால்பங்காவது கொடுத்துவிடு என்று பாதத்தில் வீழ்ந்து சரணடைந்தான். அவனை அன்போடு எடுத்து அரவணைத்த நம்பாடுவான் உனக்கு ஏன் பிரம்ம ராட்சச உருவம் வந்தது என்று கேட்க அதற்கவன் முற்பிறவியில்தான் யோகசர்மா என்ற பிராமணனாக இருந்ததாகவும் யாகம் செய்யும் போது அதனை இழிவாகக் கருதியதாலும் உண்மையான பற்றில்லாமல் செய்தபடியாலும் இவ்விதம் நேர்ந்தென்றும், உன்னைப்போன்ற பக்தர்களின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எனக்கு சாபவிமோசனம் ஆகும் என்று வரமிருப்பதால் உனது பரவை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூற அவனும் உகந்து நான் திருக்குறுங்குடி நம்பியை கைசிகம் என்ற பண்ணினால் பாடி உகப்பித்தேன். அதனால் பெற்ற பலத்தில் பாதியை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல அவ்வளவில் அவனது சாபம் நீங்கியது. இவ்வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணங் கூறுகிறது. மூலவர் நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, வடுக நம்பி, வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம் தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார் தீர்த்தம் திருப்பாற்கடல் விமானம் பஞ்சகேதக விமானம் |