பக்கம் எண் :

462

காட்சி கண்டவர்கள்

     சிவபெருமான், கஜேந்திரன்.

சிறப்புக்கள்

     1. இத்திருத்தலத்தின் பெருமை சொற்களால் விரித்துச்
சொல்லத்தக்கதன்று. சொல்லிமாள முடியாத பெருமை கொண்டது. ஈண்டு
சிலவற்றை மட்டும் தருவோம்.

     இங்கு உள்ள கோபுரத்தில் குடிகொண்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்கள்
அவைகளின் நேர்த்திக்கும், கலையம்சத்திற்கும் சிற்பக் கலைக்கும்
உன்னதமான எடுத்துக்காட்டாய் திகழ்கின்றன. சிற்பங்களின் எண்ணிக்கை
அளவு கடந்தது. எனவே இதனைச் சித்ரகோபுரம் என்றும் கூறுவர்.

     2. நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய
நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த
திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்கட்குப்
பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே
நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது
இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.

     3. திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.
அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார்
தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின்
நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு
வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல
நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட
அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் தெற்கு
கோபுரம் போலவே (ஜீயர் ஸ்வாமிகளால் ராஜகோபுரமாக கட்டப்பட்ட
நிலைக்கு முன்பு இருந்தது) திருக்குறுங்குடியின் கிழக்கு கோபுரமும்
அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது
இந்த திவ்ய தேசம்தான். இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருவரசு
எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய
பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு