| பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம் திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார். இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது. 4. இங்கிருந்துதான் திருமங்கையாழ்வாரின் மங்கள விக்ரகத்தை திருவாலி திருநகரிக்கு கொண்டு சென்றனர். 5. இராமானுஜர் வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்துவரலானார். இராமாவதாரம், கிருஷ்ணவதாரத்தில் தம்மால் செய்ய முடியாத இக்காரியத்தை நீர் இவ்வளவு சுலபமாய் செய்த விந்தை எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க அதற்கு இராமானுஜர் கேட்கும் விதத்தில் கேட்டால் பதில்தருவோம் என்று சொல்ல இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று விளக்கம் கேட்க இராமானுஜர் நம்பியின் செவியில் நாராயண மந்திரத்தை யோதி இம்மந்திரத்தால்தான் என்றார். திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே (எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான். 6. திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார். எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை (திருவனந்தபுரத்தில்) தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனை அழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது |