பக்கம் எண் :

475

80. ஸ்ரீவைகுண்டம்

     புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
          யிருந்து வைகுந்தத்துள் நின்று
     தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
          என்னையாள்வாய் எனக்கருளி
     நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
          நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
     பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
          கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
                  (3571) திருவாய்மொழி 9-2-4

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநெல்வேலியிலிருந்து,
திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள “நவதிருப்பதிகளை” இதனை முதல் இருப்பிடமாகக் கொண்டு
சேவித்து திரும்பலாம்.

வரலாறு.

     பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம்
ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற
அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக் கிரந்தம்)
படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒளிந்து
கொண்டான்.

     தம்நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து
மீட்கும்பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன் கரத்திலிருந்து
ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம் தவமியற்றுவதற்கு ஒரு
சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு பூவுலகிற்கு அனுப்பினார்.
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த
அழகியின் மயக்கத்திலீடுபட்டு தான் வந்த வேலையை மறந்து போயினான்.

     இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு பெண்ணாக்கி,
யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்து வா என்று சொல்ல அவள்
தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து
பிரம்மனிடம் கூற, பிரம்மன்