பக்கம் எண் :

474

கொண்ட பிராமணன் இவர்களைப் பேயாகப் போகுமாறு சபிக்க,
அப்பெண்களும் பதிலுக்கு இவனைப் பேயாகப் போகுமாறு சபித்தனர்.
இவ்விதம் பல காலம் பேயாக அலைந்து கொண்டிருக்க பிரியம்வதனைக்
காண அவனது தந்தை நடந்ததை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்து யாது
செய்வதென முனிவர்களிடம் வினவ இதற்குத் தோத்தாத்தரி நாதனைக் குறித்து
கடுந்தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்க அவரும்
அவ்விதமே செய்யலானார்.

     இறுதியில் திருமால் பிரத்தியக்ஷ்மாகி அவர்களின் பேயுருவை ஒழித்து
சுசிலைக்கும், பிரியம்வதனனுக்கும் திருமணம் செய்யச் சொல்லி அவ்விருவரும்
இல்வாழ்வில் புகுந்து நெடுங்காலம் இப்பெருமானுக்கு தொண்டாற்றி
திருமாலடியெய்தினர்.

     எனவே கடுந்தவத்தினால் கோரிய கோரிக்கையை நிறை வேற்றப்படுதல்
இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

     9. வைகுண்டத்திலிருப்பது போலவே இத்தலத்தில் எம்பெருமான்
எழுந்தருளியிருப்பதை தலைப்பில் இட்ட பாடலில் வான நாயகனே என்று
நம்மாழ்வார் மறை முகமாக விளித்துரைப்பதனால் அறியலாம்.

     10. முக்தியளிக்கும் எட்டுத்தலங்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.

     11. இக்கோயில் நிர்வாகம் வானமாமலை மடத்து ஜீயர் சுவாமிகளின்
ஆதினத்தில் உள்ளது. அவர்களே பரம்பரை அறங்காவலராக இருந்து
இத்திருக்கோவிலில் ஒன்றும் குறைவு வராமல் பூஜை, திருவிழாக்கள்
நடத்திவருகிறார்கள். இக்கோயில் திருப்பணிகளும் அவர்களே செய்து
திருக்கோயிலைப் பொலிவுடன் விளங்கும்படி செய்து வருகிறார்கள்.

     12. இத்திருக்கோயிலின் முக்கியமான திருவிழா பங்குனி
பிரம்மோத்ஸவம், சித்திரை பிரம்மோத்திஸவமும் ஆகும்.