2. திருப்பாற்கடலே இங்கு சேற்றுத் தாமரைத் தெப்பமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே பரமும், வியூகமும் இங்கு ஒருங்கே அமைந்தது போலாகும். 3. இங்கு பெருமானுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் சகல வியாதிகளும் தீரும். 4. ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கேதான் எழுந்தருளியுள்ளார். மணவாள மாமுனிகளால் நியமனம் செய்யப்பட்ட அஷ்ட திக்கஜங்களுள் இந்த ஜீயர் முதன்மையானவர். மணவாள மாமுனிகள் “வாரீர் பொன்னடிக்கால் ஜீயரே” என்று இவரை அழைக்க மணவாள மாமுனிகளின் பாதுகைகளாக விளங்குபவர் ஸ்ரீவானமாமலை ஜீயர் (விஷ்ணுவின் பாதுகைகள் நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகைகள் மணவாள மாமுனிகள், மணவாள மாமுனிகளின் பாதுகைகள் வானமாமலை ஜீயர்] 5. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள் அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார். 6. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 7. நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரி தவிற வேறெங்கும் நம்மாழ்வாருக்கு மங்கள விக்ரகம் இல்லை. இத்தலத்தில் உள்ள சடாரியில் நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரே வந்து ஆசிர்வதிப்பதற்குச் சமானமானதாகும். 8. சுசிலை என்ற பெண் காவிரியில் நீராட வந்தபோது பிரியம்வதன் என்ற பிராமணனின் அழகில் மோஹித்து தனது தோழிகளுடன் வந்து தன்னை இப்போதே மணந்துகொள்ளுமாறு கேட்க, அவன் தான் பிரம்மச்சாரி என்று கூறி திருமணத்திற்கு மறுக்க இவர்கள் விடாப்பிடியாக தொந்திரவு செய்ய மிகவும் சினம் |