பக்கம் எண் :

472

     இவ்விதம் ஆதிசேடனை விட்டால். கருடன் என்ற நிலைக்கு கருடனுக்கு
வரமளிக்கப்பட்டது இத்தலத்தில்தான்.

வீபிதகன் மகன் தவமியற்றியது.

     காவிரியின் வடகரையிலுள்ள திருமூலம் என்ற சிவபதியில் வாழ்ந்து
வந்த வீபிதகன் பெரும் செல்வன். அவனது புதல்வன் தர்மவத்சலன் கெட்ட
சிநேகிதத்தால் தன் தந்தை தேடிய செல்வம் எல்லாம் தொலைத்து
வியாபாரிகளுடன் சேர்ந்து வாணிகம் செய்யும்போது அவர்களின்
பொருட்களையும் திருட அதைக்கண்டுபிடித்த வணிகர்கள் இவனை
நையப்புடைக்க காட்டிற்கு ஓடிய இவன் சிங்கத்தால் கொல்லப்பட்டு
பதினாயிரம் ஆண்டுகள் பிசாசாக அலைந்து இறுதியில் சண்டாளனாக ஒரு
ஜென்மம் எடுத்து அப்போதும் தீச்செயல்களே செய்ய குஷ்டம் வந்துவிட்டது.
இதற்கு விமோசனம் யாது என தமது ஊரிலிருந்த திருமாலடியாரை வினவ
அவர் சேற்றுத் தாமரையில் நீராடினால் குட்டம் மறையும் என்று சொல்ல
கடும் பக்தியுடன் அவ்விதமே செய்ய நோய் நீங்கி திருமாலடியான் ஆகி
இறுதியில் வைகுந்தம் அடைந்தான்.

மூலவர்

     தோத்தாத்திரிநாதன் (வானமாமலை)

உற்சவர்

     தெய்வநாயகன்

தாயார்

     ஸ்ரீதேவி, பூமிதேவி

தீர்த்தம்

     சேற்றுத்தாமரை தீர்த்தம்

விமானம்

     நந்தவர்த்தன விமானம்

காட்சி கண்டவர்கள்

     பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன். கருடன் ஊர்வசி, திலோத்தமை.

சிறப்புக்கள்

     1. ஸ்வயம் விய்க்த ஸ்தலம் என்ற அமைப்புப்படி இது தானாகத்
தோன்றிய ஸ்தலம். எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த வண்ணமே
சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.