எழுப்பினான். இம்மன்னன் யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை. அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே பிரதானமாக இருந்து வருகிறது. மூலவர் ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான். தாயார் வைகுந்தவல்லி, பூதேவி. தீர்த்தம் பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம். விமானம் சந்தர விமானம் காட்சி கண்டவர்கள் பிரம்மா, இந்திரன், காலதூஷகன். சிறப்புக்கள் 1. பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது. 2. மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும். 3. நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். 4. 108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான். 5. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். |