83. திருத்துலைவில்லி மங்கலம் துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில் முதலாவதான தேவர் பிரான் ஸ்தல வரலாறு. துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும் குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ (3271) திருவாய்மொழி 6-5-1 | என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் நேராக இரண்டு மைல் தொலைவு கிழக்கே வந்து, கோமல் என்னும் இடத்திற்கு அருகில் தாமிரபரணி யாற்றைக் கடந்தால் இத்தலத்தை யடையலாம். நெல்லை மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் இத்தலத்தைச் சேவிப்பதுதான் மிகவும் சிரமம். ஆழ்வாரால் பாடப்பட்டது போன்று மணிமாடங்கள் யாதும் இங்கில்லை. தனிக்காட்டில், புதரும், காடும், முட்செடிகளுள் மண்டியுள்ள இடத்தில் இத்திவ்ய தேசம் அமைந்துள்ளது. “ஆளரவமற்ற தனிக்காட்டில் அம்போ” என்று சொல்வது போல் இத்தலம் அமைந்துள்ளது. இப்பெருமான் மீது நம்மாழ்வார் மயங்குந்திறம் எளிதிற் சொல்லும் தரமன்று. நின்று நின்று நெஞ்சு குமுறு மென்கிறார். வரலாறு பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார நிலையம்” என்று இத்திருப்பதியைக் குறிக்கின்றது. முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம் ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது, அலைந்து
|