பக்கம் எண் :

486

     6. நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்ட திவ்ய தேசமாகிறது.

     7. இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச்
சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய
(நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர்
மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த
மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை
மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற
நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.
ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள
பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி)
அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட
அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும்
கோரினார்)