பக்கம் எண் :

489

மூலவர்

     தேவப்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்

     உபயநாச்சியார்கள் (கருந்தடக்கண்ணி நாச்சியார்)

தீர்த்தம்

     தாமிரபரணி, வருணதீர்த்தம்

விமானம்

     குமுத விமானம்

காட்சி கண்டவர்கள்

     இந்திரன், வாயு, வருணன் (அவிர்ப்பாகம் பெற்ற தேவர்கள்) சுப்ரபர்

சிறப்புக்கள்

     1. ஊரும் நாடுமல்லாது காடேகினான் என்னு மாப்போல காட்டில்
அமைந்துள்ள திவ்ய தேசமிது. இதைத் தரிசிக்கச் செல்லுமிடத்து அர்ச்சகர்
இருக்கும் நேரம் தெரிந்தோ, அல்லது அவரை கையுடன்
அழைத்துக்கொண்டோ செல்ல வேண்டும்.

     2. திருக்கோளூர் திவ்ய தேசத்தின் அர்ச்சகரே இதற்கும் நித்திய
ஆராதனம் செய்கிறார்.

     3. இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி
மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான் சன்னதி
தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.

     அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது
திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் தாமிரபரணியிலிருந்து
பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.

     4. யார் காலத்தில் எப்போது, இப்போதுள்ள கோவில்
கட்டப்பட்டதென்று அறியுமாறில்லை. கோவிலின் உட்புறத்திலும் பிரகாரத்தின்
இடைப்பட்ட கற்களிலும், நடைபாதையோரத் தூண்களிலும் மூலஸ்தானச்
சுற்றுப்புற மதில்களிலும் கல்வெட்டுக்கள் பொதிந்துள்ளன. பெரும் பாலானவை
சிதலமடைந்துள்ளன.