பக்கம் எண் :

490

     5. மூலஸ்தானத்தைச் சுற்றி வலம் வர இயலாது. அப்பாதை கதவிட்டு
அடைக்கப்பட்டுள்ளதால் புல்லுஞ் செடியும் மண்டிக்கிடக்கிறது. அர்ச்சகரின்
உதவியுடன் அக்கதவைத் திறந்து சென்று கண்டால் மூலஸ்தானக் கோபுரத்தில்
உள்ள இன்னும் மங்காத வர்ணத்தையும் (பெயிண்டையும்) அழகிய
வேலைப்பாட்டையும் காணலாம்.

     6. இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக
கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால் இரண்டு
பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில் தனித்தனியே
குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.

     7. நம்மாழ்வாரால் மட்டும் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
(இரண்டு பெருமாள்களையும் குறிக்கும் பாக்கள்)

     8. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளியுள்ளார்.

     கீழ்கண்ட ஸ்தலங்களே நவதிருப்பதிகள் என்று அழைக்கப் படுகின்றன.

     ஆழ்வார் நவதிருப்பதிகள்

     1. திருவைகுண்டம்
     2. திருவரகுணமங்கை
     3. திருப்புளிங்குடி
     4. திருத்துலை வில்லிமங்கலம்
     5. திருக்குளந்தை
     6. திருக்கோளூர்
     7. திருப்பேரை
     8. திருக்குருகூர்.