பக்கம் எண் :

491

துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத்
திருப்பதியில் இரண்டாவதான ஸ்ரீ அரவிந்த
லோசனர் ஸ்தல வரலாறு

 திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
 திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவல்லி மங்கலம்
 கருந்தடக்கண்ணி கைகொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும்
 இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே
                            (3278) - திருவாய்மொழி 6-5-8

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத் திவ்ய சேத்திரம் தாமிரபரணியின்
வடகரையில் உள்ளது. துலைவில்லி மங்கலத்தின் முதலாவது திருப்பதியான
தேவபிரான் சன்னதியிலிருந்து நேர் வடக்கே சுமார் அரை பர்லாங் தூரத்தில்
உள்ளது.

வரலாறு

     பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி உரைக்கிறது.

     தேவப்பிரான் சன்னதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் பெற்றபின்
இவ்விடத்தே பெரும் யாகஞ் செய்து முடித்த சுப்ரபர், தினந்தோறும் அருகில்
உள்ள பொய்கையிற் சென்று தூய்மையும், மணமும், பேரழகும் வாய்ந்த
தாமரை மலர்களைக் கொய்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்து வரலாயினர்.

     தினந்தோறும் இத்தகைய அழகு மலர்களைக் கொணர்ந்து சுப்ரபர் பூஜை
செய்வதைக்கண்ட பெருமான், இம்முனிவர் மலர் பறிக்கும் அழகையும்,
எங்கிருந்து இதனைக் கொணர்கிறார் என்றும் அறிய சுப்ரபரின் பின்னாலேயே
வரலாயினர்.

     பொய்கையில் தியானத்தோடு பூப்பறிக்கும் சுப்ரபரைக் கண்டு வியந்து
பெருமாள் அங்கேயே (தாமிர பரணியின் வடகரையிலே) நின்றார்.
இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர் மிகவும் வியந்து இவ்வண்ணம் பின்
தொடரக் காரணம் கேட்க, பெருமானும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப்
புஷ்ப பூஜைக்கு உகந்தே இங்கே நின்றோம்.

     தாமரை மலர்களை விரும்பி நான் இங்கு நின்றதால் அரவிந்த
லோசனன் என்ற திரு நாமமே எனக்கு நிலைத்திடும். நீவிர் எப்போதும்
போன்று தேவப்பிரானோடு, எனக்கு சேர்த்து தாமரை மலர்களாலேயே
அபிஷேகம் செய்யுங்கள். எவனொருவன் தாமரை மலர்களால் இங்கு என்னை
பூஜிக்