பக்கம் எண் :

494

84. திருக்குளந்தை

     கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன்
          கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
     பாடற்றொழிய இழிந்து வைகல்
          பல்வளையார் முன் பரிசழிந்தேன்
     மாடக்கொடி மதிள் தென்குளந்தை
          வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
     ஆடற் பறவை யுயர்த்த வல்போர்
          ஆழி வளவனை யாதரித்தே
                     (3561) திருவாய்மொழி 8-2-4

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம்
திருப்புளிங்குடியிலிருந்து. நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல்
தொலைவில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார்
7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.

     திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று
சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும்.

     பெருங்குளம் பெருமாள் கோவில் என்றே இங்குரைவோர் கூறுகின்றார்.

வரலாறு

     ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.

     இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது.
அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த
வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப்
புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள பொய்கையில் நீராடி
நாள் தோறும் பகவானை வேண்டிவந்தான்.

     பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு
“கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள் தான்
மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை