காட்சி கண்டவர்கள் அஸ்வினி, தேவர்கள், சுப்ரபர் சிறப்புக்கள் 1. பொதுவாக தேவப்பிரான் ஸ்தலத்திற்கு கூறின யாவும் இத்தலத்திற்கும் பொருந்தும். 2. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் சம்பந்தமாக கூறப்படும் இன்னொரு முக்கியமான கதையும் (வரலாறும்) உண்டு. கங்கை நதிக்கரையில் உள்ள அகளங்கமென்னும் அக்ரஹாரத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த சத்யசீலர் என்பாருக்கு, வண்ணிசாரன், விபீதகன், சுவர்ணகேது என்னும் மூன்று புத்திரர்கள் இருந்தனர். இவர்களில் விபீதகன் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது துன்புற்று வந்தான். அவ்வமயம் அங்குவந்த நாரதரைத் தொழுது விபீதகனுக்கு எவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று வினவினார். நாரதர் முப்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவைத் திருடினான். குருவின் சாபத்தால் கைவிரல், கால் விரலில் உள்ள நகங்கள் எல்லாம் குறைந்து விகாரத்தை (குஷ்டத்தை) அடைந்துள்ளான். தாமிரபரணியின் வடகரையில் உள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள பெருமானை வழிபட்டால் குஷ்டம் நீங்கும் என்றார். பின்பு எல்லோரும் அங்குவந்து பெருமாளைத் தரிசித்தனர். விபீதகன் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான். வெகு காலம் அங்கேயே தங்கியிருந்து, இரண்டு ஸ்தலத்தின் பெருமாள்களுக்கும் எண்ணற்ற பணி விடைகள் செய்து இறுதியில் மோட்சம் பெற்றான். 3. ஆழ்வார்களில் நம்மாழ்வார் மட்டும் மங்களாசாசனம். 4. ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். |