தீர்த்தம் பெருங்குளம் விமானம் ஆனந்த நிலய விமானம் காட்சி கண்டவர்கள் பிரகஸ்பதி, வேதசாரன் சிறப்புக்கள் 1. இக்கிராமம் மிகச் சிறியதாய் இருந்தாலும் ஒரு காலத்தில் இது மிகப் பெரிய நகரமாக இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. கோவில் சிதலமடையாது பண்டைப் பொலிவு பெற்று எழில் கொஞ்சி விளங்குகிறது. 2. கமலா தேவியையும் நெஞ்சில் ஏற்றுக் கொண்டதால் பெருமான் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். பெருமாள் நெஞ்சகத்தில் கமலா தேவி இடம் பெற்றுள்ள திருக்காட்சியும் இங்கு காணலாம். 3. இங்கு சிலநேரம் அர்ச்சகர் இல்லாவிட்டாலும், இக்கோவிலின் புணருத்தாரணப் பணியில் ஈடுபட்டுள்ள இவ்வூர் இளைஞர் சங்கத்தினர் எந்நேரமும் பெருமாளைச் சேவிக்க வசதி செய்து கொடுப்பர். 4. இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார். 5. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். 6. இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார். இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார். |