பக்கம் எண் :

497

85. திருக்கோளுர்

     “வைத்தமாநிதியாம் மது சூதன னையே யலற்றி
          கொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
     பத்து நூற்றுளிப் பத்து அவன் சேர் திருக்கோளுர்க்கே
          சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுலகாள்வாரே”
                            (3303) திருவாய்மொழி 6-7-11

     என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய ஷேத்திரம் ஆழ்வார்
திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சற்றே தென்கிழக்கில் உள்ளது.
ஆழ்வார் திருநகரிலியிருந்து பேருந்து வசதி இருப்பினும் நடந்து சென்று
சேவித்து வரலாம். இது ஒரு மிகச் சிறிய கிராமம்.

வரலாறு

     பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும்
தெரிவிக்கிறது.

     ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப்
பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து
அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன்
சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான
உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமைய வளின் அழகில்
மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.

     இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட
எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக்
கடவதென்றார்.

     உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள்
தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து
அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க,
அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான்
அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப்
பள்ளி கொண்டான்.

     நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது
சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள்