பிரயோகித்துள்ளார். எனவே பார்ப்பதற்கே பேரதிசயமாக தோன்றும் காட்சி இதுவாகும். 17. இங்குள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவை. 18. இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது. இது கருங்கல்லில் குடைந்த அதிசய இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது. இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது. இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு. 19. இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு பெரிய திருமேனியுடைய இந்த மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். 20. ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்று இங்கும் அரையர் சேவை உண்டு. திருமஞ்சனத்தின்போது பிரபந்தங்களையும், புருஷஸு க்தத்தையும் தாளம் போட்டுக்கொண்டே படிக்கும் முறை இங்கு இன்றும் வழக்கில் உண்டு. 21. 1991இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. “குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்” | என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச் சொல்லப்படுகிறது. |