பரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது. இந்த ஊருக்கு வரும்போது எதிரில் வந்த ஒரு பெண்ணைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்று கேட்க “கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்த வியன்புணல் வழுதி நாடன் சடகோபன்” என்ற பாசுரத்தை அப்பெண் கூறி இன்னும் கூப்பிடு தூரத்தில் உள்ளது எனக்கூற இராமானுஜர் அப்பெண்ணை ஆழ்வாராகவே கருதி சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கினார். 12. மணவாள மாமுனிகளும் இந்த தலத்திற்கு எழுந்தருளினார். ஆதிப்பிரான் சன்னதிக்கு முன்புறம் அமைந்த கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே நிறுவினார். 13. இங்கு ஆழ்வார் சன்னதியும், ஆதிப்பிரான் சன்னதியும் தனித்தனியே உள்ளது. பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் 60 அடி தூரம் தள்ளி ஆழ்வார் சன்னதி உள்ளது. பெருமாள் விமானத்தையும் விட ஆழ்வார் சன்னதி விமானம் சற்று பெரியது. இங்கு ஆதிநாதரைவிட நம்மாழ்வாருக்குத்தான் ஒரு படி ஏற்றம். ஊரின் பெயரையே மாற்றிவிட்ட பெருமை அவருக்கு உண்டல்லவா? ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7 கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே பெயர். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே பிரசித்தமாயிருந்தது. 14. இங்கு தெற்கு மாடத் தெருவில் கீழ்புரம் திருவேங்கிட முடையான் சன்னதியும், மேல்புரம் திருவரங்க நாதன் கோவிலும், வடக்கு மாடத் தெருவின் மத்தியில் பிள்ளைலோகாச்சாரியர், அழகிய தேசிகர், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு. 15. எம்பெருமானார் - ஜீயர் இங்கு எழுந்தருளியுள்ளார். அவருக்குத் தனி மடம் உண்டு. 16. இங்குள்ள நம்மாழ்வார் விக்ரஹம் எந்தவிதமான உலோகத்தாலும் செய்யப்பட்டதன்று. தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தமது சக்தியை |