பக்கம் எண் :

514

வியந்து, கற்றோர் வாழும் குருகூரில் நமது கல்வி சூரியன் முன் மின்மினிக்குச்
சமமானதே என்று நாணமுற்றார்.

     8. இந்திரன் தனது மனைவியுடன் மதுவில் மாந்தி இன்பம் நுகரும்
போது அவனைக் காணவந்த காசிப முனிவரைக் கண்டும் காணாதது
போலிருக்க இதனால் சினமுற்ற காசிபர் “உனது இளமையில் திமிராலும்,
செல்வச் செருக்காலும் எம்மை மதியாதிருந்தமையால் நீ இளமை இழந்து
மூப்பாவதுடன் ஐஸ்வரியமும் இழக்கக் கடவாய் என்று சபித்தார். இதனால்
துடித்த இந்திரன் சாப விமோசனம் வேண்டி மன்றாடினான். இவனை நோக்கிய
காசிபர், தாமிரபரணி யாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆதிப்பிரானைக்
குறித்து தவமிருந்து சாபம் போக்கிக் கொள் என்று சொல்ல இந்திரனும்
இவ்விடம் வந்து தவமிருந்து திருமால் அருளுக்கு உரியவனாகி சாப
விமோசனம் பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரத்தில் “சிரங்களால் அமரர்
வணங்கும் திருக்குருகூரதனுள்” என்று குறிப்பிடுகிறார்.

     9. இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்தில் பகவான் பிரம்மச்சர்ய
யோகத்தில் இருப்பதால் லட்சுமி தேவி பெருமானை நாடிவந்த காலத்தில்
லட்சுமி தேவியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.

     10. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டது
இத்தலம். “நின்ற ஆதிப்பிரான்” என்றும் “பொலிந்து நின்ற பிரான் கண்டீர்”
என்றும் இப்பெருமானின் திருநாமங்களை சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்
நம்மாழ்வார்.

     11. இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த
ஊருக்கு வெகுதொலைவில் வரும்போதே தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம்
காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,
 

     இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
          இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
     வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
          ஓதும் சடகோபன் ஊர்

     என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமானுஜர் ஆழ்வார் திருநகரியை
பரமபதத்து எல்லை என்கிறார். இது