| வெடித்து மாபெரும் ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது. ஆகா இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார் “வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப் பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ் சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே” | என்று பாடினார். 6. ஒரு சமயம் இத்தலத்தில் யானை ஒன்றும் வேடன் ஒருவனும் பொருத இருவரும் மாண்டனர். இருவருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே எமதூதர்களும், விஷ்ணு தூதர்களும் வந்து சேர்ந்தனர். இருவரும் இறந்ததும், இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக அவர்களை விஷ்ணு தூதர்கள் அழைத்துச் சென்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் தீட்டப்பட்டுள்ளன. குருகா மாலை என்னும் நாலும் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது. “செஞ்சர நாணிட்ட சிலைவேடனும் பொருகைக் குஞ்சரமும் வான்சேர் குருகை” | 7. கம்பர் இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றும் போது பெரியபெருமாள் சடகோபனைப் பாடினாயோ என்று கேட்க, கம்பர் சடகோபரந்தாதி பாடினார். அந்தமில்லா மறையாயிரத் தாழ்ந்த வரும்பொருளைச் செந்தமிழாகத் திருத்திய வேணி தேவர்கள் தத்தம் விழாவு அழகு மென்னா தமிழார் கவியின் பந்தம் விழாவொழுகும் குருகூர் வந்த பண்ணவனே” | என்று குருகூரின் பெருமையையும், சடகோபரின் பெருமையையும் பாடினார். பின்னர் இவர் குருகூருக்கு வரும் வழியில் ஏற்றம் இறைப்போர் பாட்டினையும் “மூங்கில் இலைமேல் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே என்ற பாடலையும், கணவனை இழந்த கைம்பெண்ணின் ஒப்பாரியையும் கேட்டு மிகவும் |