பக்கம் எண் :

512

     ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா,
அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ என்று நினைத்து
பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின்
இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக,
எம்மைப்பாடுக என்று நான் முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல்
கேட்டதாக ஐதீகம்.

     ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது இந்தப்
புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய ஸ்தலங்கட்கு பாசுரம்
அருளினார்.

     3. இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த
மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது திடீரென்று
அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி அவரைக் கவர்ந்திழுக்க
இது விந்திய மலையில் தோன்றக் கூடுமென நினைத்த அவர் அங்குவந்து
கண்டால் மேலும் தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து
நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும் நானறியேன்”
என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே தொழிலெனக் கொண்டு
அவரால் மொழியப் பட்ட திருவாய் மொழியினை ஏட்டில் எழுத லுற்றார்.

     4. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள்
மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப் பெற்று அதை
பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு
அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே
அவற்றை எழுதி தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.

     5. இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச் சித்தர்
என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு நாய் இருந்தது. அது
தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து ஸ்ரீ வைணவர்கள் உணவருந்தி
விட்டு எறிந்த எச்சில் இலையில் உள்ள மீத உணவை உண்டுவந்தது.

     ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு நதியைக்
கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு அதனின்றும் மீள முடியாமல்
உயிர் துறக்க நேர்ந்தது. அது உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம்