பக்கம் எண் :

511

மூலவர்

     ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான் கிழக்கு நோக்கி
நின்ற திருக்கோலம்.

தாயார்

     ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி என்று இரண்டு நாச்சியார்கள்.
இருவருக்கும் தனித்தனியே கோவில்கள்.

தீர்த்தம்

     தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,

விமானம்

     கோவிந்த விமானம்.

காட்சி கண்டவர்கள்

     பிரம்மா, நம்மாழ்வார், சங்கன், தாந்தன், ரிஷிகள், மதுரகவியாழ்வார்.

சிறப்புக்கள்

     1. ஆதிநாதர் கோவில் ஒரு காலத்தில் தாமிரபரணி
ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும் பெரிய தாக்கும்
பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து அலகல்லும் படித்துறையும்
கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும் புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன.
அப்புளி இன்றும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல
பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிடிக்காத
காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய மரத்திலிருந்து நிணநீர்
வடிவது கண்கூடு.

     நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல்
திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு
கொண்டு விட்டது.

     2. ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும்.
சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின்
பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து
திருவாய் மொழி மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,