6. ஆழ்வார்கள் திருத்தங்காலப்பன் என்றே அழைத்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் “பிரம்ம சுவாமி” யெனப்போற்றுகின்றன. 7. ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் உஷயை மணந்தது இந்த தலத்தில்தான். 8. சந்திரகேது என்ற மன்னன் ஏகாதசி விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதம் விடக் கூடிய நேரத்திற்கு (துவாதசி பாரணைக்கு முன்) முன்பே எண்ணெய் தேய்த்துக் குளித்ததால் புலியாகப் பிறந்து பூவுலகெங்கிலும் அலைய இந்த ஷேத்திரம் வந்ததும் பூர்வ ஜென்ம நினைவு ஏற்பட்டு இப்பகவானை பூஜித்துமோட்சம் பெற்ற ஸ்தலம். 9. ஸ்ரீதேவி இத்தலத்தில் தவம் செய்து பகவானே உகந்து “எல்லா மஹிஷிகளையும் விட எனக்கு நீயே மிகவும் பிரியமானவள்” எனவே இந்நகரத்திற்கு ஸ்ரீபுரம் என்றே பெயருண்டாகட்டும் என்று பகவானே கூறியதாக விஷ்ணு புராணங் கூறும். 10. இங்குள்ள கருடாழ்வார் சர்ப்பத்துடனும் அம்ருதகலசத்துடனும் காணப்படுகிறார். தனக்கு எதிரியான சர்ப்பத்தை தன்னுடன் வைத்திருப்பதும், கருடாழ்வான் கலசம் ஏந்திய திருக்கோலத்திலிருப்பதும் வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத காட்சியாகும். 11. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையுங்கொண்டது. 12. பூதத்தாழ்வார், ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். |