வரலாறு இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம் கூடற் புராணம் போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும் இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது. கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார். திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும் அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி பரமபதம் அடைந்தான். துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான். கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக் கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன். இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான் பெரியாழ்வார்,
“பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்” | என்கிறார். இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்” என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும் தெய்வம் எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும் |