பக்கம் எண் :

535

என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே
அறுந்துவிழும் என்றும், இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான்.
இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று
வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக
இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே
இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே பரம்பொருள்,
வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று
கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு
எழுந்தருளினார்.

     சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள்,
மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி
திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம்
எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது.
இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து
போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து
ஊர்வலமாய் அழைத்து வரலானான். இக்காட்சியைக் காண கூடலழகரே
பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார்.

     இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ இவ்விதம்
காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ என்று நினைத்து
எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.

     இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத்
தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக
அமைந்துவிட்டது.

மூலவர்

     கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்

     மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி என்ற
பெயர்களும் உண்டு.

தீர்த்தம்

     கிருதமாலா, ஹேமபுஷ்கரிணி