பக்கம் எண் :

55

முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனை திருவாலி திருநகரி
ஸ்தல வரலாற்றில் காணலாம்)

     இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர். கலியுகத்தில்
ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக
அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி
ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட
கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக் கோவிலில்
அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல
வல்லியையும் பிரதிட்டை செய்தான். இம்மன்னனின் பெயர்
இன்னதென்றறியுமாறில்லை.

மூலவர்

     அழகிய மணவாளன், நின்ற திருக்கோலம் வடக்கு நோக்கிய
திருக்கோலம்.

தாயார்

     கமலவல்லி நாச்சியார். உறையூர் வல்லி வடதிசை நோக்கி
திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலம்.

தீர்த்தம்

     கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி

விமானம்

     கல்யாண விமானம்

காட்சிக் கண்டவர்கள்

     ரவிதர்மா, கமலவல்லி.

சிறப்புக்கள்

     1. திருப்பாணாழ்வார் இங்குதான் அவதரித்தார். இத்தலத்தில் அவருக்கு
தனிச் சன்னதி உள்ளது.

     2. சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானை யொன்று
இவ்வூருக்குள் வந்தபோது ஒரு கோழி அதனை யெதிர்த்து யுத்தம் செய்து
தனது கால் நகங்களினாலும். அலகினாலும் கொத்திக் குதறி யானையின்
கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால்
இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாகித் திருக்கோழியாயிற்று.
என்றுரைப்பர்.