3. கமலவல்லித் தாயாருக்கும், ஸ்ரீ ரெங்கநாதனுக்கும் நடைபெற்ற காதல் நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்களை ஸ்ரீரெங்கராஜ சரிதபானம் என்னும் வடநூல் சிறப்பித்துச் சிலாகித்துப் பேசுகிறது. 4. திருமங்கையாழ்வார் ஒரேயொரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இவரும் இத்தலத்தின் பெயரை மட்டுமே குறித்துள்ளார். குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) சேர, சோழ, பாண்டிய மண்டலங்கட்கு மன்னனாய் இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தாரென்றும், அவ்வமயம் இக்கோவிலுக்கு மதில் எழுப்பியும் அளவற்ற நிலதானமும் செய்தாரெனவும் அறியமுடிகிறது. வரலாற்று ரீதியாக இது ஆய்வுக்குரிய விசயமாக இருந்தாலும் கீழ்வரும் பாடலில் குலசேகராழ்வார் (கொல்லி) கொல்லிமலை, கூடல், கோழி இம்மூன்றுக்கும் தம்மை மன்னன் என்று மறைமுகமாகச் சுட்டுவதொன்றே ஆதாரம். அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையிலடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் சொல்லினின் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்க ளாவரே (பெருமாள் திருமொழி 2ம் பத்து 10 ஆம் பாடல்) | 5. மிகப் பிர்ம்மாண்டமான இத்திருத்தலம் பேரழகு வாய்ந்தது. 6. சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும் சோழர்களின் முதல் தலைநகரமாக இந்த உறையூர் விளங்க, காவிரிப் பூம் பட்டிணம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக விளங்கியதென்றும். இளஞ் சேட்சென்னி என்னும் அரசன் இவ்வூரை ஆண்டதாகவும் இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால் இறைவன் சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும், நெருப்பு மாரி இந்த ஊரில் |