பெய்ததாகவும் ஒரு வரலாறுமுண்டு. மண்மாரி பொழிந்து இவ்வூர் அழிந்து பட்ட தென்பதற்கே ஆதாரம் அதிகம் எவ்வாறெனில் நன்றாயிருந்த உறையூர் அழிந்துபட்ட தென்பதே நூல்கள் உரைக்கும் செய்தி, உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது, வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவன் இவ்வூரின் பெருமையை அவனுக்கு உணர்த்த எண்ணி அம் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை நோக்க, அது உக்கிரம் கொண்டு யானையைக் குத்தி வீழ்த்தியது என்றும், இதை உணர்ந்த பின்பே, மன்னன் இவ்வூருக்கு அந்தக் கோழியின் பெயரால், திருக்கோழி என்றே பெயரிட்டான். இவ்வூருக்கு, குக்கிடபுரி, வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற பெயர்களுமுண்டு. 7. கரிகாலச் சோழன், குலோத்துங்க சோழன், நலங்கிள்ளி, கிள்ளி வளவன் முதலானோர் ஆண்ட இடமிது. நாயன்மார்களில் புகழ்ச் சோழர், கோச்செங்கன் சோழர் ஆகியோரின் பிறந்த ஊர். 8. கமலவல்லி நாச்சியாரை திருவரங்கன் அழகிய மணவாளனாக வந்து திருமணம் புரிந்ததை நினைவுகூறும் முகத்தான் இன்றும் வருடமொருமுறை ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் இங்கு எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாசனத்தில் இங்கு சேவை அளிக்கிறார். இந்த திருக்கல்யாண உற்சவம் கர்ணப் பேரழகு வாய்ந்தது. |