கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை. மூலவர் புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம். தாயார் பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர். தீர்த்தம் கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று. விமானம் உத்யோக விமானம் காட்சி கண்டவர்கள் பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள், திருமங்கையாழ்வார். ஸ்தல விருட்சம் கதலீ (வாழை மரம்) சிறப்புக்கள் 1. மும்மூர்த்திகளும், ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள இக்காட்சி வேறெங்கும் கண்டற்கரியது. எனவே இது ஒரு த்ரிமூர்த்தி தலம். 2. பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம் (கபாலம்) நிறைந்ததால் பிட்சாடன மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். எனவே பிட்சாண்டார் கோயில் என்ற மறுபெயரும் உண்டு. 3. இங்குள்ள ராஜகோபுரம், மற்றதிவ்ய தேசங்களைவிட மிகச் சிறியதாக இருந்தாலும், மிகவும் கலை நுணுக்கங்களுக்கும், பேரழகுக்கும் பெயர் பெற்றதாகும். |