4. ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார். யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற, மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும், அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார். 5. பக்தன் ஒருவனுக்கு மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த ஸ்தலம் இது ஒன்றுதான். மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு. 6. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார். சில மாதவஞ் செய்தும் தீ வேள்வி வேட்டும் பல மாநதியிற் படிந்தும் உலகில் பரம்ப நூல் கற்றும் பயனில்லை நெஞ்சே கரம்பனூர் உத்தமன் பேர் கல் என்பது பிள்ளை பெருமாளயங்காரின் பாடல் | 7. ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும். 8. திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. 9. கி.பி. 1751 இல் ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரருக்கும் நடந்த போரில் கர்னல் ஜின்ஜன் என்பவன் திருச்சிராப்பள்ளிக்கோட்டையிலிருந்து பின்வாங்கி இந்த |